தேனியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவையில் மறைந்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்களின் உருவப்படத்தினை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.மாநிலச்செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர்,மாவட்டச்செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், எம்.ராமச்சந்திரன், டி.கண்ணன்,சி.முனீஸ்வரன், கே.எஸ்.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.