districts

img

மூத்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் எம்.அய்யாச்சாமி மறைவு

சிவகாசி, ஜன.2- விருதுநகர் மாவட்டத்தில் தொலைத் தொடர்புத்துறையின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்த வரும், தலைசிறந்த தொழிற்சங் கத் தலைவரும், பல்வேறு போராட்டங்களை சமரசமின்றி நடத்தியவருமான தோழர் எம்.அய்யாச்சாமி (73) ஜனவரி 1 அன்று இரவு சிவகாசியில் அவ ரது இல்லத்தில் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். மத்திய தொலைத் தொடர்புத் துறையில் ஆப்பரேட்டராக பணி புரிந்தவர் தோழர் எம்.அய்யாச் சாமி. 1982 காலகட்டத்தில் கே.ஜி.போஸ் அணியை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றிய தலைவர் களில் ஒருவர் ஆவார். பின்பு, அத்தொழிற்சங்கத்தில்  தலை வராகவும், செயலாளராகவும் செயல்பட்டார். அப்போது நடைபெற்றத் தேர்தலில் லைன் மேன் சங்கத் தின் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். சங்கத்தின் வழிகாட் டுதல்படி தொழிலாளர்களுக் காக எண்ணற்றப் போராட்டங் களை சமரசமின்றி தன் வாழ்நாள் முழுவதும் நடத்தியவர். பின்பு, பி.எஸ்.என்.எல் உரு வான போது, அச்சங்கத்தின் விருது நகர் மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இதை யடுத்து, 2009 வரை துடிப்பு மிக்க மாவட்டச் செயலாளராக பணியாற்றினார்.

பல கூட்டுப் போராட்டங்களில் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டவர். ஓய்வு பெற்ற பின்பு, ஏஐபிடிபிஏ மாவட்ட செயலாளராக தனது இறுதி காலம் வரை பொறுப்பு வகித்து வந்துள்ளார். சிவகாசி பகுதியில் ஜேசிடியு செயலாராகவும், சிஐடியு சிவ காசி ஒன்றிய கன்வீனராகவும்  பொறுப்பு வகித்து வந்தார். தோழர் எம்.அய்யாச்சாமி யின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறப்பினர்கள் எஸ்.பாலசுப்பிர மணியன், எம்.மகாலெட்சுமி, மாவட்ட செயலாளர் கே.அர்ஜூ னன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், பி.என்.தேவா, அ.விஜயமுரு கன், எல்.முருகன், கே.முருகன், சிவகாசி நகர் செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய செய லாளர் பி.பாலசுப்பிரமணியன், தமுஎகச மாவட்டத் தலைவர் தேனிவசந்தன், ஏஐபிடிபிஏ அகில இந்திய உதவித் தலை வர் எஸ்.மோகன்தாஸ், மாநில நிர்வாகி எம்.செல்வராஜ், மாவட்டத் தலைவர் ஜி.செல்வ ராஜ், மாவட்ட பொருளாளர் எம். பெருமாள்சாமி, பிஎஎஸ்என்எல் இயு மாவட்டச் செயலாளர் குரு சாமி, ஒப்பந்த ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர்  உட்பட  பலர் நேரில் அஞ்சலி செலுத்தி னர். அவரது இறுதி நிகழ்ச்சியில் திரளான பிஎஸ்என்எல் ஊழி யர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.