தேனி, ஜன.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர் களில் ஒருவரும், விவசாய தொழிலாளர் சங்க மாநி லக்குழு உறுப்பினருமான தோழர் ஜி.முத்துக்கிருஷ்ணன் (69) ஞாயிறன்று காலை கால மானார். சோசலிஸ்ட் வாலிபர் முன்ன ணியில் தன்னை இணைத்துக் கொண்ட முத்துகிருஷ்ணன், பின் னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர், பெரியகுளம் தாலுகா செயலா ளர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என பல்வேறு பொறுப்பில் இருந்து திறம்பட பணியாற்றி னார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றி, பல தோழர்களை கட்சிக்குள் கொண்டு வந்தார். சில ஆண்டு கள் தீக்கதிர் நாளிதழில் பெரிய குளம் தாலுகா செய்தியாளராக பணியாற்றியவர். தற்போது அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக, மாவட்டப் பொரு ளாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதமாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயி றன்று காலை 11.30 மணியளவில் காலமானார்.
இவருக்கு முத்து லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ள னர். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை வகித்தவர். போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென் றுள்ளார். இவரது மறைவு செய்தி அறிந் ததும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மூத்த தலை வர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர். சங்கரசுப்பு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கண்ணன், எம். ராமச்சந்திரன், சு.வெண்மணி, இ.தர்மர், சி.முனீஸ்வரன், இடைக்கமிட்டி செயலாளர்கள் எம்.வி.முருகன், செல்வம், கே.எஸ்.ஆறுமுகம், போஸ், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பி னர் கே.சரவணகுமார், திராவிடர் கழக தலைவர் அன்புக்கரசன், சிபிஐ தாலுகா செயலாளர் காசி விசுவநாதன் உள்ளிட்ட ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தோழர் முத்துக்கிருஷ்ணன் தீக்கதிர் செய்தியாளராக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து தீக்க திர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங் கம் இரங்கல் தெரிவித்துள்ளார்.