நாகர்கோவில், நவ.30- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி யர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் குறித்து பேரூ ராட்சிகள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கலந்தாய்வு மேற் கொண்டார். அப்போது அவர் பேசிய தாவது: கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 22இல் இத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அதிகப்படி யாக புற்றுநோய் கண்டறியப்படும். மூன்று வகையான புற்றுநோய்க ளான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கான கண்ட றியும் பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டுவருகின்றது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வாய் புற்றுநோயும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் நோய் கண்டறியும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வனைத்து பரிசோதனை களும் வலியின்றி மிக விரைவில் மிக எளிதாக செய்துக்கொள்ள லாம். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனு மதி பெற்றுள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் இப்பரிசோதனை கள் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் அனை த்துப்பயனா ளர்களையும் மூன்று வருடத்திற்குள் பரிசோதிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறை பணியாளர்கள் உங்கள் இல்லங்கள் தேடி வந்து இத்திட்டத்தி ற்கான அழைப்பிதழ்கள் வழங்கு வார்கள். இவ்வழைப்பிதழ்களில் அருகாமையிலுள்ள பரிசோதனை முகாம்கள் பயனாளர்களுக்கு தெரி யப்படுத்தப்படும். இத்திட்டத்திற் கான அழைப்பிதழ்கள் பெறப்பட்ட வுடன் பரிசோதனை முகாமிற்குச் சென்று பரிசோதனைகள் செய்திட வேண்டும். பரிசோதனையில் புற்று நோய் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேற்பரிசோதனைகள் செய்யும் வசதியுள்ள அரசு மருத் துவமனைகளில் மேற்பரிசோ தனைக்காக பரிந்துரை செய் யப்படும். சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழக அரசின் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திட வேண் டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் பொது சுகாதா ரப்பணிகள் துணை இயக்குநர் சு. மீனாட்சி, சூரியநாராயணன், பேரூ ராட்சிகள் மற்றும் ஊராட்சிமன்ற தலை வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.