districts

img

ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆர்.எம்.காலனி சாலைப்பணி துவக்கம்

திண்டுக்கல், மார்ச் 9- திண்டுக்கல் ஆர்.எம்.காலனி சாலையை மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி துவக்கப் பட்டது.  திருச்சி ரோடு பாலம் ரவுண்டானா அருகிலிருந்து எம்.வி.எம். அரசு பெண்கள் கல்லூரி வரையிலான ஆர்.எம். காலனி சாலையை மேம்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி யின் சார்பாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து வெக்கா ளியம்மன் கோவில் அருகில் பணி துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன், 3 ஆவது வார்டு திமுக உறுப்பினர் இந்தி ராணி, 4 ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் ராஜ்மோகன், 6 ஆவது வார்டு திமுக உறுப்பினர் சரண்யா மற்றும் மாநக ராட்சி பொறியாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.