districts

img

கிராம வளர்ச்சி குறித்து ஊராட்சித் தலைவர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

இராமநாதபுரம், டிச.6- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் டிசம்பர் 6 அன்று ஊரக  வளர்ச்சித் துறையின் மூலம் கிராம ஊராட்சி யின் வளர்ச்சி குறித்து மேற்கொள்ள வேண்  டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி  டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் இராமநாதபுரம், திருப் புல்லாணி, முதுகுளத்தூர், மண்டபம் ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலை வர்கள் முன்னிலையில் கிராம ஊராட்சி  வளர்ச்சி திட்டம் குறித்து வடிவமைக்கப் பட்டுள்ள முக்கிய திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசு கையில், அடிப்படை வசதிகளான குடிநீர்,  சாலை வசதிகளை மேம்படுத்த திட்டங் களை தீர்மானிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் பணிகள் நடைபெறும். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி களையும் பொது நிதியில் இருந்து எடுக்கப் படும் வேலைகள் விரைந்து முடிக்க வேண்டும்.

அனைத்து ஊராட்சிகளிலும் உரிய முறையில் குடி தண்ணீரில் குளோரி நேசன் செய்யப்பட வேண்டும். பொதுமக்க ளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு கண்கா ணிக்க வாட்டர் மீட்டர் பொருத்தப்பட வேண்டும். தெரு விளக்குகள் அலைபேசி மூலம் செயல்படுத்தும் முறை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளன. 2023-24 கிராம வளர்ச்சி திட்டம்  தயார்செய்யும் போது தண்ணீர் மேலாண்மை குறித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பயன்பாடு அற்ற  மின் இணைப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு  தேவையான மருத்துவ உதவிகளை செய்திட வேண்டும். அதேபோல் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தேவையான மருத்துவ உதவிகளை பெற்று வழங்கிட வேண்டும். பொதுவாக ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு செயல்பட்டு மக்க ளின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் பணி மிக முக்கியமான ஒன்றாக திகழ்ந்திட வேண்டும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார், பர மக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.