தூத்துக்குடி, செப். 17 தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூய்மை பணி நடைபெற் றது. உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத் தும் தினமாக கடைபிடிக்கப் படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை மூலமாக தமிழ்நாடு முழு வதும் உள்ள 14 கடற்கரை மாவட்டங்களில் உள்ள கடற்கரைகள் தூய்மைப் படுத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி விவேகானந்தர் காலனி, இனிகோ நகர், திரேஸ்புரம் ஆகிய கடற்கரை பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார் முன்னிலையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், மாநகராட்சி தூய்மை காவ லர்கள், காமராஜ் கல்லூரி, தூய மரியன்னை ஹோலி கிராஸ் அறிவியல் கல்லூரி யைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் மற்றும் பல் வேறு தொண்டு நிறுவ னங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், நூறு டன் அளவிலான குப் பைகள் அகற்றப்பட்டது.