districts

img

சட்டமன்ற மரபை மீறிய ஆளுநர் ரவியைக் கண்டித்து சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

தேனி, ஜன.11- தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில அரசின் உரையில் சில பகுதி களை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி அவராக சில  வார்த்தைகளை சேர்த்துப் பேசி னார். ஆளுநர் ரவியின் இந்த அரா ஜகச் செயலை பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டித்தனர். ஆளு நர் பதவி விலகக்கோரி மாண வர்கள், வழக்கறிஞர்கள்,பல்வேறு அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகினறனர். இதன் தொடர்ச்சியாக சிஐடியு அரசு போக்கு  வரத்து தொழிலாளர்கள் சங்கத்தி னர் ஆளுநரைக் கண்டித்தும் பதவி விலகுமாறும் ஜனவரி 11 அன்று போராட்டம் நடத்தினர்.  தேனி மாவட்டத்தில் உள்ள  அரசு போக்குவரத்து பணிமனை கள் முன்பாக சிஐடியு போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் போக்குவரத்து பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்திற்கு சங்கத்தின் துணை  பொதுச்செயலாளர் ஜி.மணிகண்  டன் தலைமை வகித்தார். தேவா ரத்தில் உதவித் தலைவர் மணி மாறன் சோலை தலைமையிலும், தேனியில் கிளை செயலாளர் சதீஷ்குமார், பெரியகுளத்தில் கிளைச்செயலாளர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏரா ளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

மதுரை 

அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்  பில் மதுரையில் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மதுரை அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் மகாதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில துணைத் தலை வர் வீ.பிச்சை கண்டன உரை யாற்றினார். மத்திய சங்க நிர்வாகி கள் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

பழனி

பழனி பேருந்து பணிமனை  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு செயலாளர் மகேந்தி ரன் தலைமை வகித்தார். சிஐடியு  கன்வீனர் பிச்சை முத்து பேசி னார்.

விருதுநகர்

விருதுநகர் பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு முத்துராஜ் தலைமையேற்றார். சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் ஜி.வேலுச்சாமி கண்டன உரை யாற்றினார். சிவகாசியில் பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆதித்தமிழர் - தமிழ்ப்புலிகள் கட்சியினர் கைது

ஆளுநரின் உருவ பொம்மை யை எரிக்கும் போராட்டம் ஆதித்  தமிழர் கட்சியினர் சார்பில் புத னன்று மதுரை ஆட்சியர் அலுவல கம் அருகே மாவட்டத்தலைவர் ஆத வன் தலைமையில் நடைபெற்றது. காவல்துறையினர் உருவ பொம்மையை பறிமுதல் செய்த னர். ஆதிதமிழர் கட்சியினர் 12 பேரை கைது செய்தனர். தேனியில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தமிழ் புலிகள் கட்சி யினர் 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போலீசார் தடுத்து நிறுத்தி, உருவபொம்மையை எரிக்க விடா மல் கைப்பற்றினர்.‌ இதையடுத்து தங்கள் கைகளில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். உருவப்படத்தை கிழித்தெறிந்து அவருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.