districts

img

பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.8 கூலி கேட்டு சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், டிச.21- பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.8  கூலி கேட்டு திண்டுக்கல்லில் சிஐடியு தொழிற்சங்கத்தைச்  சேர்ந்த சுமைப்பணித் தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திண்டுக்கல் செட்டிய பட்டி அருகேயுள்ள டாஸ்  மாக் குடோன் முன்பாக சிஐ டியு சார்பாக செவ்வாய்கிழ மையன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் ஜே.முக மதுல்லா தலைமை வகித் தார். தமிழ்நாடு முழுவதும் 43 டாஸ்மாக் குடோன்கள் உள்ளன. இந்த குடோன் களில் 2500க்கும் மேற்பட்ட  சுமைப்பணித் தொழிலா ளர்கள் பணியாற்றுகிறார் கள். இந்த தொழிலாளர் களுக்கு இறக்கு கூலியை  மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் வழங்கி வருகிறது.  இறக்கும் கூலியை உயர்த் தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் அந்த கூலி முறை அம லாக்கப்படவில்லை. லிக்கர் பெட்டி ஒன்றுக்கு ரூ.5.50 லிருந்து ரூ.8 ஆக உயர்த்தி தர வேண்டும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4லிருந்து ரூ.8 ஆக உயர்த்தி தர வேண்டும். பெட்டிக்குள் பெட்டி உள்ள  பெட்டி ஒன்றுக்கு ரூ.8.50 லிருந்து 50 பைசா கூட்டி ரூ.9  ஆக உயர்த்தி தர வேண்டும்.

கவர் இல்லாத பிரிமியர் பெட்டி ஒன்றுக்கு ரூ.6 லிருந்து ரூ.8 ஆக உயர்த்த வேண்டும். வெளிநாட்டு மது பான பெட்டி ஒன்றுக்கு ரூ. 50லிருந்து ரூ.60 ஆக உயர்த்தி  தர வேண்டும். குடோன் விட்டு குடோன் மாற்றும் போது பெட்டி ஒன்றுக்கு ரூ.10லிருந்து ரூ.15 ஆக கூலியை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிஐடியு மாவட்டச்செயலா ளர் பிரபாகரன் கூறுகை யில்,  மற்றத் தொழிலாளர் களோடு டாஸ்மாக் தொழி லாளர்களின் கூலி பிரச்ச னையை ஒப்பிடும் போது  ஏற்றுக்கூலி மிகவும் குறை வாக உள்ளது. ஏற்றுக்கூலி பிரச்சனையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்  மாக் நிர்வாகம் ஒரே நிர்வா கம் தான். மாவட்டத்திற்கு மாவட்டம் ஏற்றுக்கூலி வேறு பாடு உள்ளதை யார் சரி  செய்வார்கள் என்ற பிரச் சனை உள்ளது. 50 பைசா முதல் ரூ.2 வரை தான் உய ர்த்திக் கேட்கிறோம். எனவே தமிழக அரசு டாஸ்மாக் நிர்  வாகம் மற்றும் ஒப்பந்த காரர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை உள்ளது  என்று பேசினார்.  ஆர்ப்பாட் டத்தில் சுமைப்பணித் தொழி லாளர் சங்க சிஐடியு மாவட்டச்செயலாளர் ஏ. பிச்சைமுத்து, டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர் சங்க சிஐடியு செயலாளர் எம்.சுரேஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் கே. மாரிமுத்து, துணைச்செய லாளர் ஏ.ஆரோக்கிய தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு  பேசினர். துணைத்தலைவர் என்.பாலாஜி நன்றி கூறி னார்.            (ந.நி.)