சிவகாசி, ஜூன் 28- சிஐடியு-ஆட்டோ தொழிலாளர் சங் கத்தின் சிவகாசி எஸ்.என் புரம் பிரிவு அருகே புதிய கிளை அமைப்பு கூட்டம் மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் முத்துராஜ் தலைமையேற்றார். பெயர்ப்பலகையை மாவட்ட பொதுச் செயலாளர் பி.என். தேவா திறந்து வைத்து சிறப்புரையாற்றினார், மேலும் இதில், மாவட்டத் தலைவர் மகேந்திர குமார், சிபிஎம் நகர செயலாளர் ஆர் சுரேஷ் குமார், மாவட்ட குழு உறுப்பி னர் ஜோதிமணி, முத்து இருளாண்டி, பழனிசாமி, ரிசர்வே லயன் தலை வர் மாரிமுத்து, ஹவுசிங்போர்டு ஸ்டாண்ட் தலைவர் குருவையா உட்பட பலர் பங்கேற்றனர்.