சென்னை, மே 31- தமிழ்நாட்டில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் தனது வேட்பு மனுவுடன் அளித்த பிரமாண பத்திரத்தில், அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை அளித்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரில் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உட்பட ரூ.135 கோடி அசையும் சொத்து உள்ளது என்றும் பரம்பரை சொத்து உட்பட ரூ.5.83 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள். ரூ.76.46 லட்சம் கடன் உள்ளது. ப.சிதம்பரத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.140.83 கோடியா கும். அவரது மனைவி பெயரில் 1457 கிராம் தங்கம், 76.71 கேரட் வைரம் உட்பட ரூ.17.39 கோடி அசையும் சொத்து, ரூ.26.53 கோடி மதிப்பு அசையா சொத்து, ரூ.5 கோடி கடன் ஆகியவை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, பிரிக்கப்படாத குடும்ப சொத்து அடிப்படை யில் ரூ.4.59 லட்சம் அசையும் சொத்து, ரூ.12.21 கோடி அசையா சொத்து, ரூ.74.34 லட்சம் மதிப்பு கடன் ஆகியவை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில், ரூ.8.76 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, ரூ.18.45 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் ரூ.27.22 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, ரூ.2.10 கோடி மதிப்பில் அசையா சொத்து, தாயார் பெயரில் ரூ.61.84 லட்சம் மதிப்பு அசையும் சொத்து ஆகியவை குறிப்பிடப் பட்டுள்ளது. தர்மர் பெயரில், ரூ.14.49 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, ரூ.62.37 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் ரூ.17.09 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மகள்கள் பெயரில் ரூ.36.05 லட்சம் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது.