districts

img

ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்

ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்  திருவில்லிபுத்தூர், ஜூன் 3 - விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் குன்னூரில் ஆண்டாண்டு காலமாக இயங்கி வரக்கூடிய சார்பதிவாளர் அலுவலகத்தை மற்ற சார்பதிவாளர் அலுவலகத்தோடு இணைக்கும் முயற்சியை கைவிடக் கோரியும் போக்குவரத்து நகரில் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து வீடு கட்டிய நபருக்கு வழங்கிய பட்டாவை  ரத்து செய்து ஓடையை அளந்து தூர் வாருவதோடு  ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிருஷ்ணன் கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பொன்னுப் பாண்டி யன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமசாமி ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகள் சங்க  புதிய கிளை அமைப்பு                                         திருச்சுழி, ஜூன்.,3- திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில்   தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை  அமைக்கப்பட்டது. கிளைத் தலைவராக மாரியம்மாள், செயலாளராக ரஹமத்துல்லா, பொருளாளராக கே.லாசர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்டத்தலைவர் ஏ. குமரேசன் கலந்து கொண்டு விளக்கிப் பேசினார்.