நம்பர் பிளேட் இல்லாத 77 வாகனங்கள் மீது வழக்கு
திருநெல்வேலி, டிச. 23- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நெல்லை யில் போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ள னர். குறிப்பாக மாநகர பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ஜவுளிக் க்கடைகள், தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை யொட்டி மாநகர பகுதியில் உள்ள டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, கே.டி.சி.நகர், பெருமாள்புரம், டக்கம்மாள்புரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிக ளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த காவல் ஆணை யர் அவினாஷ் குமார் உத்தரவிட்டார். அதன்படி கிழக்கு மண்டல துணை ஆணையர் சீனிவாசன் மற்றும் மேற்கு மண்டல துணை ஆணையர் சரவணக்குமார் ஆகி யோரின் அறிவுறுத்தலின்பேரில் மாநகரில் வியாழன் இரவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.இந்த சோதனையில் ‘நம்பர் பிளேட்’ இல்லாத மோட்டார் சைக்கிள்கள் உள்பட சுமார் 77 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
அமைச்சரை மிரட்டியதாக சசிகலா புஷ்பா மீது வழக்கு
தூத்துக்குடி, டிச. 23 தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் புதனன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமைச் சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக மாணவர் அணி வழக்கறி ஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன் என்பவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளார். அதன்பேரில் சசிகலா புஷ்பா மீது 504, 505(2), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் காவல் ஆய்வாளர் சிவ ராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
சசிகலா புஷ்பா வீடு தாக்குதல்: 13பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி, டிச. 23 தூத்துக்குடியில் பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர்கள் உட்பட 13பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பி & டி காலனியில் உள்ள, மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின ரும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா வீட்டின் ஜன்னல், பூந்தொட்டி, கார் கண்ணாடி ஆகிய வற்றை வியாழனன்று மர்ம நபர்கள் அடித்துச் சேதப் படுத்தினர். சசிகலா புஷ்பா வீட்டில் திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ரத்னராஜ் என்ற கனி (35) அளித்த புகாரின் பேரில் திமுக கவுன்சிலர்கள் ரவீந்தி ரன், ராமகிருஷ்ணன், டூவிபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா மற்றும் 9 பெண்கள் என மொத்தம் 13பேர் மீது 147, 448, 427, 294 பி, 506(1) ஆகிய 5பிரிவுகளின் கீழ் சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காட்டுப்பன்றி தாக்கி இருவர் காயம்
திருநெல்வேலி, டிச. 23- கடையம் கிராமத்தில் காட்டுப் பன்றி தாக்கியதில் இருவர் காயமடைந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந் துள்ளது கடையம் கிராமத்தில், வனப் பகுதியிலிருந்து வெளியேறும் மிளா, காட்டுப்பன்றி, கரடி, சிறுத்தை மற்றும் யானை உள்ளிட்டவிலங்குகள் விளை நிலங்க ளில் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கடையம் கிராமத்தில் வயல் பகுதிக்கு வந்த காட்டுப்பன்றி, அங்கிருந்து வழிதவறி கடையம் காவல் நிலையம் பின்பகுதி வழியாக கீழக்கடையம் கிரா மத்தில் நுழைந்தது. அப்போது தெரு நாய்கள் விரட்டி யதால் பயந்து ஓடிய காட்டுப் பன்றி, வழியில் நின்ற கீழக்கடையத்தைச் சேர்ந்த ராசுக்குட்டி மகன் பரசுரா மன் (15), ராமசாமி மகள் வைஷ்ணவி (14) ஆகியோ ரைத் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் ஊருக்குள் நுழைந்த காட்டுப் பன்றியை வனப் பகு திக்குள் விரட் டும் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியிலி ருந்து வெளியேறும் விலங்குகள், பயிர்களைச் சேதப் படுத்தி வந்த நிலையில் ஊருக்குள் நுழைந்து இருவரைத் தாக்கி யதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிறுமி கடத்தல்: வாலிபருக்கு 2 ஆண்டு சிறை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
திருநெல்வேலி ,டிச. 23- நெல்லையில் சிறுமியை கடத்தி சென்ற வாலிப ருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. திருப்பூர் மாவட்டம் கோவிலூர் பகுதியை சேர்ந்த வர் முருகன். இவரின் மகன் அசோக்குமார் (24). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு நெல்லையை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருப்பூ ருக்கு கடத்தி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபரா தம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.
புத்தாண்டு: தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது
திருநெல்வேலி, டிச .23- ஆங்கில புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாகர்கோவில் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் (06042) வருகிற 26-ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு நாகர்கோவி லில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த ரயில் வள்ளியூர், நெல்லை, கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக் கோட்டை மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளி பெட்டி ஆகியவை இணைக்கப் படுகிறது. நாகர்கோவில் - தாம்பரம் அதி விரைவு சிறப்பு கட்டண ரெயில் (06020) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 1-ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறு நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையுமாறு இயக்கப்பட உள்ளது. மறு மார்க்கத்தில் தாம்பரம் - நாகர்கோ வில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06019) தாம்பரத்திலிருந்து ஜனவரி 2-ஆம் தேதி மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 5.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தல்
திருநெல்வேலி, டிச. 23- சென்னை-மதுரை தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஞானதிரவியம் எம்.பி.வலியுறுத்தினார். தில்லியில் நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது, நாடாளுமன்றத்தில் நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம் கோரிக்கைகள் குறித்து பேசும்போது கூறியதாவது:- நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை, ரயில் நிலைய மறு வடிவமைப்பு திட்டத் தின் கீழ் இணைத்து முழுவதும் குளிரூட்டப் பட்ட உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலைய மாக மாற்ற வேண்டும். நாகர்கோவில்-மும்பை ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை வழியாக புதுதில்லிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். சென் னையில் இருந்து மதுரைக்கு குறைந்த பயண நேரத்தில் அதிவேக ரயிலாக தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது. தற்போது மதுரை முதல் நெல்லை வரை இருவழிப் பாதை பணிகள் முடிவு பெற்று வருகிறது. ஆகவே இந்த தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். நெல்லையில் இருந்து செங்கோட்டை, கொல்லம் வழியாக பாலக்காடு வரை செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கீழக் கடையம், பாவூர்சத்திரம் ஆகிய நிலை யங்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்ல வேண்டும். நெல்லை- நாகர்கோ வில் இடையே உள்ள காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி, மேலப் பாளையம், செங்குளம் ரயில் நிலையங்க ளில் அனைத்து ரெயில்களும் முன்பு போல் நின்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதுதவிர நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஞானதிரவியம் எம்.பி. வலி யுறுத்தி உள்ளார்.
விளையாட்டுத்துறையில் தனி முத்திரை பதித்தது சிவகங்கை: நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் பேச்சு
சிவகங்கை, டிச.23- சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் கூறியதாவது: விளையாட்டுத்துறையில் தனி முத்திரை பதித்த ஊர் சிவகங்கை. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழிகாட்டுதலின்படி சிவகங்கை நகராட்சியில் பல புதிய திட்டங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வருகிறோம். பிறப்பு,இறப்பு சான்றிதழ் பதிவு செய்தவர்கள் அதற்காக அலையவிடாமல் அவர்களுக்கு உடனடியாக 24 மணி நேரத்தில் வீட்டுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் .தெருமுனைகளிலே புகார் பெட்டி வைத்து மக்கள் அளிக்கிற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவரை சிவகங்கை மக்கள் மகிழ்வோடு வரவேற்கிறோம் .டிசம்பர் 24ஆம் தேதி பகல் 2 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவருக்கு சிறப்புமிகு வரவேற்பு திமுக நகர கழகம் சார்பாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு துரை ஆனந்த் தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்ற கும்பல் கைது
மதுரை, டிச. 23- மதுரையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்தி ரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்வதற்காக காவல்துறை யில் தனிப்படை அமைக்கப்பட்டு ,அவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் சாலையோரமாக நின்ற சில இளைஞர்களை பிடித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் சோதனை நடத்தியபோது, இளைஞர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்குள் போதை மாத்திரை மற்றும் போதை ஊசியை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவுட்போஸ்ட் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், சுபாஷ் சரவணன், மணிகண்டன், மகாராஜன் ஆகிய நான்கு பேரிடமும் நடத்திய சோதனை யில் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 50 போதை மாத்திரைகள் மற்றும் 6 போதை ஊசிகள் , 245 கிராம் கஞ்சா உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனடுத்து 4 பேரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே மதுரை கரிமேடு பகுதியில் தனிப் படை காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த லட்சுமி, லதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணிக்கு விண்ணப்பிக்கலாம் இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு
இராமநாதபுரம்,டிச.23- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் இராமநாதபுரம் மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வாயிலாக உற்பத்தியாளர்கள் நிறுவனம், உற்பத்தியா ளர்கள் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு ஆலோ சகர்/தொழில் நுட்ப ஆலோசகர் குழு உறுப்பினர் கள் (ஒரு மண்டலத்திற்கு 5 பேர் வீதம்) பணியமர்த்தப் படவுள்ளார்கள் இதற்கு பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த (Farm & Off -Farm) , பண்ணை சாராத தொழிலில் அனுபவமும், தொழில்நுட்ப திறனும் உள்ள நபர்கள் http://www.tnrtp.org எனும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம்/ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதல்: 26பேர் காயம் தேனி ,டிச.23-
தேனி ,டிச.23- தேனி அருகே ஆதி பட்டியில் உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் தேங்காய் லோடுடன் டிராக்டர் டிராலி ஒன்று நின்று கொண்டி ருந்தது. இரவு நேரத்தில் டிராலியின் ஒளி வெளிச்சம் தெரி யாததால் திருச்சியில் இருந்து சபரிமலை நோக்கி சென்று ஐயப்ப பக்தர்கள் கொண்டிருந்த வேன் முன்னே செல்ல முற்பட்ட போது எதிரே கேரளாவில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சுற்றுலா பயணிகள் வந்த வேனில் சிதம்பரத்தை சேர்ந்த ஓட்டுநர் கணேசமூர்த்தி ,அப்துல் நசீர் ,இஸ்மாயில் மரக்காயர் ,பாத்திமா முத்து ,ஜலீனா 16 பேரும் , திருச்சியிலிருந்து சபரிமலைக்கு சென்ற திருவெறும்பூர் பகுதியை ஓட்டுநர் கணேசன் ,சரவணன் ,யோகநாதன் இளங்கோ 15 இதில் இரண்டு வேன்களில் பலத்த காயமடைந்த 31 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.