districts

img

தோழர் என்.ராமகிருஷ்ணனின் அர்ப்பணிப்பை நெஞ்சில் ஏந்தி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பணியை இளைய தலைமுறை முன்னெடுத்துச் செல்க!

மதுரை, மே 7 - கம்யூனிஸ்ட் இயக்கத்தின் காலப்பெட்ட கமாகத் திகழ்ந்த மறைந்த எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் விட்டுச் சென்ற மார்க்சிய இயக்க வரலாற்றை தொகுப்பது உள்ளிட்ட ஆவணப்படுத்தும் எழுத்துப்பணியை இளைய தலைமுறை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என படத்திறப்பு நிகழ்வில் தலை வர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தோழரும் தமிழகத்தின் மூத்த எழுத்தாள ருமான என்.ராமகிருஷ்ணன் கடந்த டிசம்பர் 13 அன்று காலமானார்.  அவரது நினைவைப் போற்றும் விதமாகவும் குடும்பத்தைப் பாது காக்கும் விதமாகவும் அவரது உருவப்படம் திறப்பு மற்றும் குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி, கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில், தீக்கதிர் இடைக்கமிட்டியின் ஏற்பாட்டில் மதுரை தீக்கதிர் வளாகத்தில் மே 5 வியாழனன்று மாலை நடைபெற்றது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் காலப்பெட்டகமா கத் திகழ்ந்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் மார்க்சி த்தை உறுதியாகப் பற்றி நின்று, தனது நூல்க ளின் வாயிலாகவும் பேச்சுக்களின் வாயிலாகவும் மார்க்சியப் பேரொளியைப் பரப்பியவாறே இருந்தார். இறுதி மூச்சுவரை மார்க்சிய இயக்க எழுத்து என்பதைத் தவிர வேறு எதுவும் அறி யாத அந்த மகத்தான தோழரின் படம் திறக்கும் நிகழ்வினை, மாமேதை மார்க்ஸ் பிறந்த நாளான மே 5 அன்றே நடத்திட வேண்டும் என்று, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளராகவும் இருந்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் முன் முயற்சி மேற்கொண்டு இந்த நிகழ்வு திட்டமிடப் பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முன்பே மே 1 அன்று இரவு தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன் கட்சியை பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டு மரணமடைந்தார். அவர் மறைந்து மூன்று நாட்களே ஆகிய போதிலும், அவர் தேதி தீர்மா னித்து ஏற்பாடு செய்த நிகழ்வு என்பதால், மார்க்ஸ்  பிறந்த நாளிலேயே எழுத்தாளர் என்.ராம கிருஷ்ணன் படத் திறப்பு நிகழ்வும், குடும்ப பாது காப்பு நிதி வழங்கும் நிகழ்வும் தீக்கதிர் வளா கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னதாக தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவுக்கு, நிகழ்வில் குழு மியிருந்த தீக்கதிர் ஊழியர்கள், கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட தோழர்கள் கனத்த இத யத்துடன் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்கு தீக்கதிர் இடைக்கமிட்டி செயலாளர் ஜோ.ராஜ்மோகன் தலைமையேற்றார்.  தோழர் என்.ராமகிருஷ்ணன் உருவப் படத்தை கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.பெருமாள் திறந்து வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். தோழர் என்.ராம கிருஷ்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தி மாநில செயற் குழு உறுப்பினர்கள் மதுக்கூர்  இராமலிங்கம், சு. வெங்கடேசன் எம்.பி., அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தீக்கதிர் செய்தி ஆசிரியர் ப.முருகன்  நன்றி கூறினார். 

நவரத்தினங்களின் அறிவுச்செறிவை உள்வாங்கியவர்
நிகழ்வில் பேசிய தலைவர்கள், தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழிலும் ஆங்கி லத்திலுமாக 98 நூல்களை எழுதியது எளிய காரியமல்ல; 1950களில் இளம்வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஊழியராக தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவர், ஜனசக்தி ஏட்டின் நூலகராக, துணை ஆசிரியராக தனது எழுத்துப் பணியைத் துவக்கி, 1963 இல் தீக்கதிர் நாளிதழை உருவாக்கிய ஆசிரியர்களில் ஒருவராக செயல் பட்டு, பின்னர் கட்சியின் நாடாளுமன்றக் குழு அலு வலகப் பணிக்கு சென்று கட்சியின் நவரத்தினத் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்து ஒட்டு மொத்த அனுபவச் செறிவையும் உள்வாங்கிய வர்; அந்த அறிவுச் செறிவே, கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றுப் பெட்டகமாக அவரை மாற்றியது; அதை நூல் வடிவில், தமிழக கம்யூனிச இயக்க வரலாறு, இந்திய கம்யூனிச இயக்க வரலாறு உள்பட தமிழ கத்தின் மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத் தின் வரலாற்றைத் தேடித் தேடி ஆராய்ந்து, தரவு களையும் நிகழ்வுகளையும் சேகரித்து காலம் முழு வதும் கம்யூனிச இயக்கத்திற்கான அறிவுப்பெட்டக மாக மாற்றி அளித்திருக்கிறார் என்று குறிப்பிட்டனர்.  கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் என்பதால் அன்றாட வாழ்க்கையை வறுமை துரத்தியபோதிலும், இயக்கத்திற்கான எழுத்து என்பதைத் தவிர வே றொன்றும் அறியாதவர் அவர்; மாமேதை மார்க்ஸ் வாழ்நாள் முழுவதும் வறுமையிலேயே உழன்றார்; ஆனால் உலகத்தோர் உய்வதற்கான தத்துவத்தை அளித்துவிட்டுச் சென்றார்.

அவ ரைப் போலவே மார்க்சியத்தை நெஞ்சில் ஏந்தி வாழ் நாள் முழுவதிலும் வறுமையில் உழன்றபோதி லும் கம்யூனிச இயக்கம் போற்றிப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கம்பீரத்துடன் எடுத்துச் செல்வதற்கான மாபெரும் வரலாற்று ஆவணங்களை அளித்துவிட்டுச்சென்றிருக்கிறார் எனவும் தலைவர்கள் குறிப்பிட்டனர். எழுதப்படாத எதுவும் ஆவணமாக மாறாது; கம்யூனிஸ்ட்டுகளான நாம் இந்திய, தமிழக அரசியல், சமூக, பண்பாட்டு வெளியில் போராடிய தும் சாதித்ததும் மிகப்பெரிய அளவு இருக்கிறது; ஆனால் அத்தனையும் இன்னும் ஆவணமாக மாறவில்லை. தோழர் என்.ராமகிருஷ்ணன், இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ஆதாரப்பூர்வமான ஆவணங்களாக மாற்றிவிட வேண்டும் என்ற வேட்கையோடு தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்தார்; அந்த அர்ப்பணிப்பை நெஞ்சில் ஏந்தி, அவர் விட்டுச் சென்ற பணியை இளையதலைமுறை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.

குடும்ப பாதுகாப்பு நிதி
இந்நிகழ்வில் தோழர் என்.ராமகிருஷ்ணன் மகன் மணவாளன், மகள் சாந்தி ஆகியோரிடம் கட்சியின் மாவட்டக்குழுக்களிடம் திரட்டப்பட்ட நிதி ரூ.4 லட்சத்தை மாநிலக்குழுவின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராம லிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி., ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் கட்சியின் தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா, மூத்த தோழர் சி.ராமகிருஷ்ணன், தோழர் என்.ராம கிருஷ்ணனின் மகன் மணவாளன், மகள் சாந்தி உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

;