districts

img

தடுத்து நிறுத்த முடியாதது

டோனா ஆஷ்வொர்த்

அவள் தடுத்து நிறுத்த முடியாதவள்
என்றழைக்கப்பட்டாள். 
ஆனால் அவள் 
நின்று நிதானிப்பதை
பார்த்திருக்கிறேன்.
ஒரு முறையல்ல
பல முறை பார்த்திருக்கிறேன்.
ஒரேயடியாய் நின்றுவிட்டாள் 
என்றெண்ணினேன்.
ஒவ்வொரு முறையும்
உயிர்த்தெழ 
நிமிர்ந்து நிற்க
வழியொன்று காண்கிறாள்.
அதே ஆளுமையாக அல்லாமல்
ஒருபோதும் 
அதே ஆளுமையாக அல்லாமல்
ஒவ்வொரு முறையும் 
கொஞ்சம் கூடிய உறுதியுடன்
கொஞ்சம் குறைந்த 
பலவீனத்துடன்.
தடுத்து நிறுத்த 
முடியாதவள் என்றார்கள்.
ஆனால்
தடுக்கப்படும்போதுதான் 
தன் பலம் அறிகிறாள்
என்றே தோன்றுகிறது.

தமிழில்: ரமணன்
டோனா ஆஷ்வொர்த் – 1931ஆம் ஆண்டு பிறந்த அமெரிக்க கவிஞர்.வனவியலாளர். ஆசிரியர். சிந்தியா ஹீரோ விருது பெற்றவர். அமெரிக்க பல்கலைக்கழக பெண்கள் சங்கத்தின் உறுப்பினர்.