தேனி, ஆக.1- சின்னமனூரில் அரசு ஆதிதிராவிடர் நலத் துறைக்கு சொந்தமான நிலத்தை மாற்று சமூகத்தினருக்கு முறைகேடாக வழங்கிய பட்டவை ரத்து செய்ய வேண்டும்.அந்த நிலத்தை மீட்டு வீடற்ற பட்டியலின மக்களுக்கு மனைப் பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தமிழர் விடுதலை களம் சார்பில் பாளை யத்தில் பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பொன் நகர் பகுதியில் உள்ள ஆதிதிரா விடர் நலத்துறைக்கு சொந்தமான நிலத்தை அதிமுக நிர்வாகி உள்ளிட்ட மாற்று சமூகத்தை சேர்ந்த சிலருக்கு பணத்தை பெற்றுக்கொண்டு வருவாய்த்துறையினர் பட்டா வழங்கியுள்ளனர்.பல கோடி பெறுமான அந்த நிலத்தை அவர்கள் மனைப்பிரிவாக்கி விற்பனை செய்ய திட்டமிட்ட னர். இந்நிலையில் வீடற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமி ழர் விடுதலை களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கடந்த 21.6.2023 ஆம் தேதி குடியேறும் போராட்டம் நடைபெற்றது.அப்போது பேச்சு வார்த்தை நடத்திய உத்தமபாளையம் கோட் டாட்சியர் மற்றும் போடி காவல் துணைக் கண்கா ணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி அந்த மக்களுக்கு பட்டா வழங்க உறுதியளித்தனர். அரசு அதிகாரிகளின் உறுதிப்படி வீடற்ற பட்டி யலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான நிலத்தை மாற்று சமூகத்தினருக்கு முறைகேடாக பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையம் புறவழிச் சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் விடுதலை களம் அமைப்பின் தேனி மாவட்டச் செயலா ளர் எ.தெய்வேந்திரன் தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமனூர் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.மணிகண்டன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை,மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.வெங்கடேசன்,ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம்,விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கர சுப்பு ஆகியோர் பேசினர்.
சிபிஎம் பாளையம் ஏரியா செயலாளர் எஸ்.சஞ்சீவிக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கரண்குமார்,என்.அம்சமணி,சி.மு.இப்ராஹிம்,தமிழர் விடுதலை களம் மாவட்ட தலைவர் ஏ.மூர்த்தி,நிர்வாகிகள் சுமதி, ஏ.பாண்டியம்மாள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். கோட்டாட்சியரின் தனி உதவியாளரிடம் மனு அளித்தனர். அப்போது தனி உதவியாளர், புகா ரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டா ரத்து செய்யப்பட்ட பின் பட்டா வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: ஏ.வி.அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை பேசுகையில், அரசு அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை காப் பாற்ற வேண்டும்.முறைகேடாக பதிவு செய் யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து சார்பதி வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான அரிஜன நத்தம் புறம்போக்கு நிலத்தை மாற்று சமூகத்தினருக்கு பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கி, முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் சிறப்பு முகாம் அமைத்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என அறிவித்துள்ளார்.சின்னமனூரில் உள்ள மேற்படி நிலத்தில் வீடற்ற பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.