நாகர்கோவில், மார்ச்.12- பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி நிலுவையை வழங்க வலியுறுத்தி கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சுயம்புலிங்கம், தலைவர் சி.ஆறுமுகம், பி.ராஜூ, ஏ.செல்வம் ஆகி யோர் விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதில் பாகுபாடு காட்டுவது கைவிடப் பட வேண்டும். ஊழியர்களை மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் நடத்தக்கூடாது. ஒப்பந்த ஊழி யர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.