districts

img

பாஜக தலைமையில் மருத்துவமுகாம்: மதுரை பணிமனை கிளைமேலாளர் தற்காலிக பணிநீக்கம்

பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் பணிமனையில் மருத்துவமுகாம் நடத்திய கிளை மேலாளர் அபிமன்யுவை தற்காலிக பணிநீக்கம் செய்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து மேலாண் இயக்குநர், போக்குவரத்து துறை, அரசு முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

அனைத்து பணிமனைகளிலும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுவது போல மதுரை பணிமனையில் இலவச கண் பரிசோதனை முகாம் 24-05-2022 அன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் தொண்டு நிறுவனத்தின் குழு உறுப்பினரான ஒரு கட்சி பிரமுகர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு கண்கண்ணாடி வழங்கி உள்ளார்.

மேற்படி நிகழ்வில் கிளைமேலாளர் கலந்து கொண்டது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.இவ்வாறான அரசு பணிமனை விழாவில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள அனுமதித்த கிளைமேலாளர் அபிமன்யுவை தற்காலிக பணிநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

;