districts

img

திண்டுக்கல்லில் பைக் ரேஸ்: 200 சிறுவர், சிறுமியர் பங்கேற்பு

திண்டுக்கல், அக்.30- திண்டுக்கல்லில் நடை பெற்ற பைக் ரேஸில் சிறுவர்,  சிறுமியர் கலந்து கொண்டு அசத்தினர். திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்டச் செயலா ளர் மற்றும் பழனி சட்டமன்ற  உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் பிறந்த தினத்தை முன்  னிட்டு திண்டுக்கல் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் திண்டுக்கல் பைக் ரேஸ் கிளப் சார்பாக திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியில் பைக் ரேஸ் நடைபெற்றது, இந்த பைக் ரேஸில் தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்க னைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டினர்.  முதல் மூன்று இடங் களை கைப்பற்றிய வீரர் களுக்கு தங்கப்பதக்கம், சுழற் கோப்பை, கேடயம், மெடல்கள் வழங்கப்பட்டன, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து கண்டு ரசித் தனர்.