மதுரை, ஆக. 31- முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கரு ணாநிதிக்குப் பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக் கோரிய பொதுநல முடித்து வைப்பு. திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா நிதி அரசியலில் மட்டும் அல் லாமல் நாடக ஆசிரியர், திரைக்கதை, கவிதைகள் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கியவர். தகவல் தொழிநுட்ப முன்னேற்றத் திற்கும், இலவசப் படிப்பு, தமிழ் வழியில் படித்தவர் களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை எனப் பல திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழ்நாட்டை இந்திய அள வில் முன்னேறிய மாநிலமா கக் கொண்டுவந்துள்ளார். ஒன்றிய அரசுடன் இணைந்து நாட்டில் பல திட்டங்கள் மற்றும் தொழில் துறை முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள் ளார். எனவே, கலைஞர் கரு ணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க முழுத் தகுதி உள்ளது. கலைஞர் கருணா நிதிக்குப் பாரத ரத்னா விருது வழங்க ஒன்றிய அரசுக்கு உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தலைவர் கலைஞர் கருணா நிதிக்குப் பாரத ரத்னா விருது வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு வியாழ னன்று தலைமை நீதிபதி கங்க பூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் அமர் வில் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் பிரதமர் அலுவலக பரிந்துரையின் அடிப்படை யில் குடியரசுத் தலைவர் தான் முடிவு செய்வார் எனத் தெரிவித்தார். அப்போது தனிப்பட்ட ஒரு நபருக்குப் பாரத ரத்னா விருது வழங்க நீதிமன்றம் பரிந்துரை செய்ய இயலாது இது நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.