districts

img

மக்கள் சேவையை பாராட்டி கொல்லங்குடி ஊராட்சி தலைவருக்கு விருது

சிவகங்கை, மே 25 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் கொல்லங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மெய்  ஞானமூர்த்தியின் மக்கள் சேவையை பாராட்டி சேவா ரத்னா விருது கலையின் குரல் என்கிற மாத இதழ் சார்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.  கொல்லங்குடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் மெய்ஞானமூர்த்தி கடந்த காலங்களில் எல்லோரும் படிக்க வேண்டும் என்கிற உயரிய கருத்தை மக்களிடம் கொண்டு  சென்ற அறிவொளி இயக்கத்தை மேம்படுத்தியவர். காளை யார்கோவில், கொல்லங்குடி ஊராட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக கூறினார்.அவ ருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி விருதை வழங்கி பாராட்டினார். விழாவில் அறக்கட்டளை சார்பாக பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.