districts

img

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி- 5 பேர் கைது

 பொள்ளாச்சி, பிப்.26- பொள்ளாச்சியை அடுத்த ஆனை மலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.  பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனசரகம் டாப்சிலிப் மஞ்சள் போர்டு இடத்தில் மர்ம நபர்கள் நடமாடுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச் சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து சிலர் தலைச்சுமையாக சந்தன மரத்துண்டு களை சுமந்து வந்து அங்கிருந்த காரில் ஏற்றி கடத்த முயற்சித்தனர். இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்த னர். இதனையடுத்து வனத்துறை அதி காரிகள் ஆனைமலை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் அர்த்தநாரிபாளையத்தைச்  சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் கேரள மாநிலம்  மன்னார் காடு பகுதியைச் சேர்ந்த முகமது பசீர்,  திருவண்ணா மலையைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் மணிகண்டன், சக்கர வர்த்தி எனத் தெரியவந்தது. இவர் களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 73 கிலோ சந்தன கட்டைகள் மற்றும் மொபைல் போன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த னர். மேலும், சந்தன மரம் வெட்ட மூளையாக செயல்பட்ட கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் என்பவரை தேடி வருகின்றனர்.