districts

மதுரை முக்கிய செய்திகள்

அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவர் கைது

அருப்புக்கோட்டை, ஜூன் 9- அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் பகுதியில் அனு மதியின்றி சட்டவிரோதமாக கருந்திரி தயாரிக்கப்படுவ தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உமாமாலினி தலைமையிலான போலீசார் அங்கு  ரோந்து  சென்றனர். அப்போது, வீரப்பன் என்பவர் தனது வீட்டின்  முன்பு உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன் படுத்தும் எளிதில் தீப்பற்றக்கூடிய கருந்திரிகள் வைத்தி ருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 50 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்த போலீசார், வீரப்பனை கைது செய்தனர்.

தற்கொலை செய்த 100 நாள்  திட்ட பணித்தள பொறுப்பாளரின் மகள் பாம்பு கடித்து பலி

விருதுநகர், ஜூன் 9-  ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளர் நாகலட்சுமியின் இரு மகள்களை பாம்பு கடித்தது. இதில், ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ளது  மையிட்டான்பட்டி. இப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி நாகலட்சுமி.  இவர்களுக்கு சங்கீதா,  விஜய தர்ஷினி,  தேன்மொழி, சண்முக பிரியா,  ஷிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நாகலட்சுமிக்கு மாவட்ட நிர்வாகம்  பணித்தள பொறுப்பாளராக வேலை வழங்கியது. இதனை யடுத்து,  வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சியின் செயலர், நாகலட்சுமியை பணி செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு பேருந்தில் வந்து கொணடிருந்த  நாகலட்சுமி திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, குழந்தைகளை கணேசன் தனது உறவினர்கள் மூலம் வளர்த்து வந்தார்.  இந்த நிலையில்,  விஜயதர்ஷினி மற்றும் சண்முகபிரியா  வீட்டின் பின்பகு தியில் குளித்துக் கொண்டிருந்தார்களாம்.  அப்போது இரு வரையும் பாம்பு கடித்துள்ளது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு  விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவ மனையில் சேர்த்தனர்.   அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சண்முக பிரியா சிகிச்சை பலனின்றி  உயிரி ழந்தார். மற்றொரு குழந்தை விஜயதர்ஷினிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை உயிரிழந்த விவகாரம் குறித்து கள்ளிக்குடி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் உயிரிழந்த 2 மாதங்களில் மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஏஓவிற்கு  கொலை மிரட்டல்  விடுத்தவர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர்,ஜூன் 9-  விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது காவல்துறை வழக்குப்பதிந்து தேடி வருகின்றது. வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கணேஷ் பாண்டியம்மாள்(30). இங்கு கூடுதல் கிராம நிர்வாக அலுவலராக நாராயண குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.  சுனிதா என்பவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 7 ஆம் தேதி கிராம அலுவலகத்திற்கு வந்த கான்சா புரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் தென்னை அடங்கலை காட்டி, சோள பயிர் சேதமடைந்து விட்டதாக சான்று கேட்டு, உதவியாளர் சுனிதாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நேற்று முன்தினம் ரத்தினம் அலுவலகத்திற்கு வந்து, பட்டா மாறுதல் செய்து தரக்கோரி வி.ஏ.ஓ நாராயண குமார், உதவியாளர் சுனிதா ஆகியோரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அளித்த புகாரில் கூமாபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ரத்தினத்தை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்ட திட்டமிடும் உறுப்பினர் தேர்தலில்  21 பேர் மனுதாக்கல் இன்று கடைசி நாள்

தேனி ,ஜூன் 9- தேனி மாவட்ட திட்டமிடும் உறுப்பினர் தேர்தல் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வெள்ளிக் கிழமை வரை 21 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் உறுப்பினர் பதவிக்கு ஊரக பகுதிகளுக்கு 5 உறுப்பினர்களும்,நகர் பகுதிகளுக்கு 7 உறுப்பினர்களும் தேர்வு செய்ய வருகிற 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது .வேட்பு மனுத் தாக்கல் செய்ய சனிக்கிழமை இறுதி நாள் ஆகும் .இது வரை ஊரக  பகுதிகளுக்கு 5 பேர்களும்  ,நகர் பகுதிக ளுக்கு 16 பேர்களும் மனுத்தாக்கல் செய்துள்ளனர் .ஊரக பகுதிகளுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ,நகர் பகுதிகளுக்கு நகராட்சி ,பேரூராட்சி மன்ற உறுப்பினர் கள் வாக்களிக்க உள்ளனர் . சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் ,மாவட்ட வருவாய் அலுவல கமான ஜெயபாரதி தெரிவித்துள்ளார்.

கோம்பை புதுக்குளத்தில்  மண் அள்ளுவதில் முறைகேடு  விவசாயிகள் சங்கம் புகார்

தேனி ,ஜூன் 9- கோம்பை புதுக்குளத்தில் முறைகேடாக மண்  அள்ளப் படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரி வித்துள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் கோட்ட அளவி லான விவசாயிகள் குறைதீர் கூட்டம்    கோட்டாட்சியர் பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் கலந்து கொண்ட பாளையம் ஏரியா விவசாயிகள் சங்க செய லாளர் லட்சுமணன் கலந்து கொண்டு பேசுகையில், கோம்பை புதுக்குளம் கண்மாயில் விதிமுறைகளை மீறி இரவு பகலாக டிராக்டர்களில் மண் கடத்தப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள் ளது என்று தெரிவித்தார்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

தேனி ,ஜூன் 9- கூடலூர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைது செய்த  காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தேனி மாவட்டம், கூடலூர் தம்மனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருத்தக்கண்ணன் மகன் அன்னக்கொடி (40).இவர் அதே பகுதியைச் சேர்ந்த  மனவளர்ச்சி குன்றிய 17 வயது   சிறுவன் ஒருவரை தனது வீட்டில் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூடலூர் தெற்கு காவல் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பிச்சைப்பாண்டி வழக்கு பதிவு செய்து அன்னக்கொடியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

பாம்பு கடித்து முதியவர் பலி 

தேனி ,ஜூன் .9- போடி அருகே முதியவர்  பாம்பு கடித்து பலியானது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . போடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் காரி (75).இவர் கடந்த புதன்கிழமை ஆடுகளுக்கு இலை பறிக்க சென்ற போது பாம்பு கடித்துள்ளது. இவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி வியாழனன்று உயிரிழந்தார் .இது குறித்து காரி மகன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

 

 

;