தேனி, ஜூலை19- கூடலூர் அருகே லோயர் கேம்பில் மர்ம காய்ச்சலுக்கு ஆயுதப்படை காவலர் பலி யான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அழ கர்சாமி. இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் அஜித் கபூர் சென்னையில் ஆவடி பட்டாலியனில் காவலராகவும், இரண்டா வது மகன் அனில் கபூர் (28) சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அனில் கபூர் நேற்று முன்தினம் தனக்கு உடல்நிலை சரியில்லை என ஆயுதப் படை காவல் ஆய்வாளரிடம் 15 நாள் மருத்துவ விடுப்பு பெற்று நேற்று முன்தினம் லோயர் கேம்பில் உள்ள வீட்டிற்கு காய்ச்சலுடன் வந்துள்ளார். நேற்று காலை காய்ச்சல் அதிகமானதும் அவரது தந்தை அழகர்சாமி அனில் கபூரை ஒரு ஆட்டோவில் ஏற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த போது அணில் கபூர் ரத்த வாந்தி எடுத்து இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அழகர்சாமி கொடுத்த புகா ரின் பேரில் குமுளி எஸ்ஐ மூவேந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.