மதுரை,ஜூன் 1-
மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த ஆண்டு முதல் இராமநாத புரம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தற்காலிக மாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் நிர்வா கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பின்வரும் பல்வேறு குரூப் ஏ,பி,சி பணியிடங்களை (பிரதிநிதி அடிப்படையில்) நிரப்ப தகுதியான அதிகாரிக ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: பதி வாளர் ஏ நிலை-12, உதவிக் கட்டுப்பாட்டாளர் தேர்வு A நிலை-11, கணக்கு அதிகாரி ஏ நிலை-10, உதவி நிர்வாக அதிகாரி பி நிலை-7 , நிர்வாக உதவியாளர் (N.S.) B நிலை-6 . தனிப்பட்ட உதவியாளர் பி நிலை-6, மேல் பிரிவு எழுத்தர் C நிலை-4 ஆகிய பணியிடங்கள். பதிவாளர் தொடங்கி மேல்பிரிவு எழுத்தர் வரை ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக கல்வி தகுதி மற்றும் அனுபவம் கண்டிப்பாக தேவையாகும். இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பம் மற்றும் முழு விவரங்களை https://jipmer.edu.in/announcement/recruitment-various-group-b-c-non-faculty-posts-deputation-basis-aiims-madurai என்ற பக்கத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
‘செய்தியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் எந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு, அதில் உங்கள் புகைப்படத்தை ஒட்டி, விண்ணப்பத்தை முழுயைமான பூர்த்தி செய்து, தேவை யான சான்றிதழ்களின் நகல்களை அட்டஸ்ட் செய்து கீழ் கண்ட புதுச்சேரி முகவரிக்கு தபால் முலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணபிக்க வேண்டிய முகவரி: Dr. Kusa Kum ar Saha, Nodal Officer (AIIMS, Madurai), Admin-I (Recruitment Cell), JIPMER, Puducherry - 605 006.