districts

img

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம்

சின்னாளப்பட்டி, மே 30- திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூ ராட்சி கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு  பேரூராட்சித் தலைவர் எஸ்பி.செல்வராஜ் தலைமை வகித்  தார். செயல் அலுவலர் பூங்கொடிமுருகு முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் விமல்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாலை,குடிநீர், மின்  விளக்கு சரிசெய்தல்,சாக்கடை கால்வாய் தூர்வாரு தல், குப்பை மேலாண்மை செய்தல் உட்பட அனைத்து  அடிப்படை பணிகளும் பாரபட்சமின்றி உடனடியாக சரி செய்யப்படும், பெருந்திட்டப் பணிகள் நிதிநிலைமைக் கேற்ப படிப்படியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்று தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.