districts

துப்பாக்கிச் சுடும் போட்டி அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்

மதுரை, அக்.5- மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடும் போட்டி அக்டோபர் 3, 4  ஆகிய தேதிகளில் மதுரை ரைபிள் கிளப்பில்  நடைபெற்றது.  ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்,  25 மீட்டர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் 50 மீட்டர் ரைபிள் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில், நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து சுமார் 50 மாண வர்கள் கலந்து கொண்டனர்.  போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற  மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற னர். வெற்றி பெற்ற மாணவர்களை அமெ ரிக்கன் கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர், உடற்கல்வி இயக்குநர் மு. பாலகிருஷ்ணன், நிதிக் காப்பாளர் எம். பியூலா ரூபி கமலம், துணை முதல்வர் அ.மார்டின் டேவிட், மதுரை காமராசர் பல்கலை உடற்கல்வி இயக்குநர் எ. மகேந்திரன் ஆகியோர் வாழ்த்தினர்.