districts

img

ஆதிதிராவிட மக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் : ஆட்சியர்

தூத்துக்குடி, ஜூலை 1 ஆதிதிராவிட மக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையின்கீழ் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் வன்கொடு மைத் தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம், ஆதி திராவிடர் நலக்குழுக்கூட்டம், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் துப்புரவு தொழிலுக்கான தடை மற்றும் அவர்தம் மறுவாழ்விற்கான சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக்கூட்டம் மற்றும் பற்றாளர் கூட்டம் ஆகியவை தூத்துக் குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் குழு சார்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கி கூறினர். ஆதிதிராவிடர் நலத் ்துறையின்கீழ் இயங்கும் மாணவ மாணவியர் விடுதிகள் மற்றும் பள்ளிக ளுக்கு வழங்கப்படும் அரசு திட்டங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆதிதிராவிட மக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் துப்புரவுத் தொழிலுக்கான தடை மற்றும் அவர்களின் மறு வாழ்விற்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படு வதை உறுதி செய்வதோடு அம்மக்க ளுக்கு காப்பீடு, வங்கிக்கடன் ஆகிய உதவிகளை செய்திட வேண்டும் என்றும், பற்றாளர் கூட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குபயினர் பணியாளர்களின் நலன்  பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

;