districts

அதிமுகவினர் சனாதனம் பற்றி மட்டுமல்ல; எதற்கும் வாய் திறந்து பேசுவதில்லை

திண்டுக்கல், செப்.8 அதிமுகவினர் சனாத னம் பற்றி மட்டுமல்ல; எதற் கும் வாய் திறந்து பேசுவ தில்லை என்று திண்டுக்கல் லில் அமைச்சர் ஐ.பெரிய சாமி கூறியுள்ளார்.  திண்டுக்கல்லில் மாநில அளவிலான தேசிய நுகர் வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமை கள் தின விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,   பெரியகருப் பன், அர.சக்கரபாணி,   மக்க ளவை உறுப்பினர் வேலுச் சாமி,  சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன்  திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சி  முடிந்த பிறகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.  பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், நலத்திட்டங்க ளை எப்படி மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது  என்பதில் தான் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் பயணம் உள்ளது. எல்லோ ருக்கும் எல்லாம் என்கிற உயர்ந்த லட்சியத்தை நிறை வேற்ற போராடிக்கொண்டி ருக்கிறார் முதல்வர். எங்க ளைப் பொறுத்தவரை கொள்கை லட்சியத்தில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் மதவாதக் கொள் கையை  ஏற்றுக்கொள்ள வில்லை. எல்லா சாதியின ரும், மதத்தினரும் ஒற்றுமை யாக வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தமிழ்நாட்டில் எந்தக் கலவரமும் நடக்காது. இந்தி யாவிலேயே தமிழ்நாடு தான் அமைதி பூங்காவாக உள்ளது. இன்னும் ஏழு தினங்களில் மகளிர் உரி மைத் தொகை ரூ.1000 வழங்க உள்ளோம் என்று மேலும் கூறினார்.