சின்னாளபட்டி,ஜூலை 22- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வுக்குட்பட்ட முசுவனூத்து ஊராட்சி மிளகாய் பட்டி கிராமத்தில் “ராக் ப்ளூ மெட்டல்ஸ்” என்கிற நிறுவனத்தின் குவாரி மற்றும் கிரசர் கடந்த 1993 ம் ஆண்டு துவங்கப்பட்டு தொடர்ந்து விவசா யத்திற்கும் பொதுமக்களுக்கும் பலவித இடை யூறுகளை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2014 -ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியா ளரால் ஆய்வு செய்யப்பட்டு கிரசர் நடத்தும் இடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் குடி யிருப்புகள் அமைந்திருப்பதாலும் கிரசர் நிறு வனம் விதிமீறல் செய்து, அதன் உற்பத்தியை அதி கப்படுத்தியதாலும் அப்போது நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்ததால் அக்கிரசர் நடத்து வதற்கான இசைவாணை மறுக்கப்பட்டதாக கூறப் படுகிறது.
அதன்பின்னர் கடந்த ஏழு ஆண்டுகள் “ராக் புளு மெட்டல்ஸ்” என்கிற ஜல்லி கிரஷர் உற்பத்தி நடத்தப்படாமல் இருந்ததாகவும் தற்போது ஏப்ரல் 2022 முதல் கிரசர் செயல்பட்டு வருவதாக இப்பகுதி பொதுமக்கள் தெரி விக்கின்றனர். குவாரியில் பாறைகளை உடைக்க அடிக்கடி வெடிகள் வைப்பதால் இப்பகுதி விவசாய நிலங்க ளில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் விவசாயி களும் மக்களும் அலறி அடித்துக்கொண்டு ஓடும் நிலை உள்ளது. குவாரியில் வெடி வெடித்து வெளியேறும் கற்கள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் ஆடு மாடுகள் மீதும் பொதுமக்கள் மீதும் விழக்கூடிய அவல நிலையில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக இக்கிராம மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். குவாரியின் ஆழம் 200 அடிக்கு சென்று விட்டது. இதனால் கிணற்றடி நீர் முழுவதும் 200 அடி ஆழமுள்ள குவாரிக்கு தலைகீழாக சென்று விடுகிறது. இதனால் விவசாயத்திற்கு நீர் பற்றாக் குறை ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், இதையே காரணம் காட்டி ஊராட்சி நிர்வாகம் ஆழ்துளைக் கிணறு களிலும் போதுமான தண்ணீர் இல்லை என எங்களுக்கு சரியாக குடிநீர் வழங்குவதில்லை என கூறுகின்றனர்.
இதனையடுத்து ஊர் பொதுமக்கள் குவாரி அமைந்துள்ள பகுதிக்கு செல்லவே அனுமதி இல்லையென்று தகராறு செய்து,மிரட்டி வெளியே அனுப்புகின்றனர். இரவும் பகலுமாக லாரியில் கற்களை ஏற்றிச் செல்கின்றனர். இத னால் இப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் சேதம் அடைந்து உள்ளது.
ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் ஒன்றியத் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் காசிமாயன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், நிலக்கோட்டை ஒன்றியம் முழுவ தும் மணல் கொள்ளை ஜரூராக நடைபெறுகிறது. அதிகாரிகளும் வாங்குவதை வாங்கிக் கொண்டு மணல் கொள்ளைகளுக்குத் துணைப் போகின்ற னர். மிளகாய் பட்டி அருகில் இருக்கும் கல்குவாரிப் பற்றி பல அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த நட வடிக்கையும் இல்லை. இந்தக் கல் குவாரி யால் குடிநீர் பஞ்சம், தோட்டத்தில் பூக்களை விவ சாயம் செய்ய முடியவில்லை, இரவில் கேட்கும் வேட்டுச் சத்தத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஊர் மக்கள் மற்றும் தீக்கதிர் நிருபர் ஹரிஹரன், தனியார் தொலைக்காட்சி நிருபர் ஜோதிக்குமார் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்த போது, குவாரியில் வேலை செய்யும் பார்த்திபன் என்பவர் நீங்கள் எப்படி புகைப்படம் எடுப்பீர்கள்; அதை முதலில் அழியுங்கள் என்று மிரட்டும் தொனியில் பேசி னார். விவசாயிகள் சங்கத்தின் உதவித் தலைவர் சுப்பையா மாவட்ட ஆட்சியருக்கும் கனிம வள உதவி இயக்குனருக்கும் மனு அனுப்பியுள்ளார். இனிமேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நட வடிக்கை எடுக்க தயங்கினால் ஒன்றியம் முழுவதும் உள்ள விவசாயிகள் பொதுமக்களைத் திரட்டி மிகப் பெரியப் போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்தனர்.