districts

img

பாஜக அரசை கண்டித்து பழனியில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பழனி, மார்ச்.18- பழனி ஒன்றியம் பாப்பம் பட்டியில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், சங்க மாவட்டச் செயலாளர் கே.அருள்செல் வன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வ ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக் கண்ணன், விவசாய தொழிலா ளர் சங்கம் ஒன்றிய பொருளா ளர் பி.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, பாப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.மாய வன் உள்ளிட்டோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதியை குறைத்துள் ளதை கண்டித்தும், பாப்பம் பட்டி ஊராட்சியில் குடிநீர், சுகாதாரம், சாலை வசதி செய்த தர வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டன.