districts

img

நடிகர் செவ்வாழை ராசு காலமானார்

தேனி ,மே.18-  தேனியை சேர்ந்த பருத்திவீரன்  திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு (70) வியாழனன்று காலமா னார். இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கர வர்த்தியின் தந்தை ஆவார்.  இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப் பட்ட செவ்வாழை ராசு ,கருத்தம்மா ,ஈரநிலம் ,கிழக்கு  சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள் ளார். சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராசு, வியாழனன்று பிற்பகல் காலமானார் .அன்னாரது இறுதி நிகழ்ச்சி கடமலைக்குண்டு அருகே அன்னாரது சொந்த ஊரான கோரையூத்தில் வெள்ளிக்கிழமை நடக்கிறது. அன்னாரின் மறைவு செய்தி அறிந்து ,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள்  டி.வெங்கடேசன் , சி.முருகன் ,சி.முனீஸ்வரன் தேனி  தாலுகா செயலாளர் இ.தர்மர் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.