districts

ஒரு மாத காலத்திற்குள் மலைவேடன் பழங்குடியின சாதிச்சான்று வழங்குவதாக ஆட்சியர் உறுதி

திண்டுக்கல்,நவ.29- திண்டுக்கல் மாவட்ட மலை வேடன் பழங்குடியின  மக்களுக்கு  இனச்சான்று வழங்காத வரு வாய்த்துறை அதிகாரிகளைக் கண்  டித்தும் உடனடியாக சாதிச்சான்று வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவேடன் முன் னேற்ற சங்கத்தின் சார்பாக திங்க ளன்று காத்திருக்கும் போராட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டத் திற்கு பிறகு, ஒரு மாத காலத்திற்  குள் மலைவேடன் பழங்குடியின சாதிச்சான்று வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சி யர் விசாகனுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மலைவாழ் மக்கள்  சங்கத் தலைவர்கள்  பெ.சண்முகம், டில்லிபாபு, மலைவேடன் சங்க மாநில நிர்வாகிகள் கந்தசாமி, கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 28 கிராமங்களில் வசிக்கும்  மலைவேடன் பழங்குடி மக்களு டைய கலாச்சாரம், அனைத்தும் கள ஆய்வு செய்து ஊட்டியில்  பழங்குடி ஆராய்ச்சி மைய இயக்கு நர் மூலமாக மானிடவியல் துறை யைச் சேர்ந்தவர்களும் இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர் வாகத்திற்கும் அனுப்ப வேண்டும்.  ஏற்கனவே  மாவட்ட ஆட்சியர் ,கூடு தல் தலைமை செயலர் மற்றும் ஆதி  திராவிடர் பழங்குடி நலத்துறை செயலாளர்க்கு இது குறித்து கடி தம் எழுதியிருக்கிறார். மீண்டும் அந்த கடிதத்தை நினைவு படுத்து வது என்று தெரிவித்தார்.

ஏற்கனவே மாவட்ட விழிக்கண் குழுவில் மாநில கூர்நோக்கு குழு வில் இறுதி செய்யப்பட்ட 9 மனு தாரர்களுடைய மனுக்கள் மீது மாவட்ட விழிக்கண் குழுவில் வரு வாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆதி  திராவிட நல அலுவலர் ஒப்புதல் அளித்து அந்த மனுக்களுக்கு விரைந்து ஒரு மாதத்திற்குள் இனச்  சான்று வழங்க வேண்டும்.  மாவட்ட விழிக்கண் ஒப்புதல் அளிக்கப்பட்ட  24 மனுக்களுக்கும் ஆதாரச் சான்று கள் அனைத்தும் ஒப்படைத்து அதன் மீது மாவட்ட வருவாய் அலு வலர் முழு விவரம் பெற்று ஒரு மாத காலத்திற்குள் இதற்கான சான்றி தழ் வழங்க வேண்டும் என்பதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வரு வாய் அலுவலரும் உறுதியளித்த னர்.இதனையடுத்து போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.  

பெ.சண்முகம் 

போராட்டத்தில்  கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் மாநில தலைவர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில முதலமைச்சர் முதற்கொண்டு வருவாய் கோட் டாட்சியர் வரை அனைத்து மட்ட  அதிகாரிகளையும், அமைச்சர் களையும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல முறை  சந்தித்து வற்புறுத்தியதற்கு பிற கும் சான்றிதழ்கள் வழங்கப்பட வில்லை. சென்னை உயர்நீதிமன் றம், மாநில மனித உரிமை ஆணை யம்  அனைத்தும் இவர்கள் பழங் குடி தான் என்று ஆணைகள் பிறப்  பித்திருக்கிற நிலையில் வரு வாய்த்துறை அதிகாரிகள் தேவை யற்ற காலதாமதம் செய்வதும் வழங்காமல் இருப்பதும் கண்ட னத்திற்குரியது என்று கூறியுள்ள னர் என தெரிவித்தார். 

டில்லிபாபு 

போராட்டத்திற்கு தலைமை வகித்த தமிழ்நாடு மலைவாழ் மக்  கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லி பாபு பேசுகையில், மலை வேடன் சமூக மக்களுக்கு இனச்  சான்று வழங்க வேண்டும் என்று  ஏற்கனவே மனுக்கள் கொடுக்கப் பட்டன. இந்த கோரிக்கையை மாவட்ட  நிர்வாகம் பரிசீலித்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று ஏ.எஸ்.பி. சொன்னார். இது சட்டம்  ஒழுங்கு பிரச்சனை இல்லை. கடந்த 25 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூர்வ பழங் குடி மக்களின் மரபுவழி பிரச்சனை தொடர்பான கோரிக்கை. திட்ட மிட்டு ஆட்சியாளர்களால், அதிகாரி களால் இந்த சமூக மக்கள் மேலே ழுந்து வராமல் அடக்கி ஒடுக்கப் பட்டதை நாங்கள் மீட்டெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம்என்றார்.

கே.பாலபாரதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி பேசுகையில், விருதுநகர் மாவட்ட வருவாய்த்  துறையில் அங்குள்ள அலுவலர் களுக்கும், ஊழியர்களுக்கும் வகுப்பெடுக்கிறார்கள். என்ன வகுப்பு? கம்யூனிசமும், நக்சலிச மும் இந்த மக்களுக்கு தீது என்று  வகுப்பெடுக்கிறார்கள். சென்னை யில் உள்ள தனியார் பள்ளியில் காவல்துறை சொல்லியும், அர சாங்கம் சொல்லியும் அதை ஏற்கா மல் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடத்து கிறது. தேனியில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்.  பயிற்சி நடத்துகிறார்கள். அதிகாரி கள் எல்லாம் அப்போது எங்கே போனீர்கள்?  தேர்தலுக்கு மட்டும் பழங்குடியினர் வேண்டுமா? சான்றி தழ் தருவதற்கு மலைவேடன் இனம் தெரியவில்லையா?  என்று கேள்வி எழுப்பினார்.


 

;