districts

img

ஒரு நாடு ஒரு உரம்: வினியோகம் தொடங்கியது

தூத்துக்குடி,டிச.1 “ஒரு நாடு ஒரு உரம்” என்ற கொள்கை யின் அடிப்படையில் இந்தியாவில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் முதல் நிறு வனமாக தனது வினியோகத்தை தொடங்கி யது. ஒரு நாடு ஒரு உரம் என்ற கொள்கை அடிப்படையில் ஸ்பிக் யூரியா என்பது பாரத் யூரியா என அழைக்கப்படும். ஸ்பிக் நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக பாரத் யூரியாவை தமிழ்நாட்டில் தமது உற்பத்தியின் வாயிலாக வினியோகம் செய்கிறது. பாரத் யூரியா தொடக்கவிழா வியாழனன்று ஸ்பிக் ஆலையில் நடை பெற்றது. பின்னர், ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் எஸ்.ஆர்.ராம கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “ஸ்பிக் நிறுவனம் 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய விவசாயிகளின் விவசாயத்தை பெருக்குவதற்கு தேவை யான அறிவியல் பூர்வமான மற்றும் இயற்கைக்கு உறுதுணை புரியும் தயாரிப்பு களை தயாரித்து வருகிறது. ஸ்பிக் நிறுவனம் முதல் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம். உரத் தயாரிப்பில் கவனம் செலுத்தி இந்திய கிராமங்களில் உள்ள விவ சாயிகளின் நம்பிக்கையை பெற்றது. ஒரு நாடு, ஒரு உரம் கொள்கை அடிப்படை யில் பாரத் யூரியாவான ஸ்பிக்நிறுவனம் அதன் நைட்ரஜன் தரத்தை பராமரித்து பயிர்கள் செழித்து வளர உறுதுனை புரிகிறது. பாரத் யூரியா, ஸ்பிக் ஆலையில் தினமும் 2 ஆயிரம் டன் உற்பத்தி செய் கிறது. ஆண்டிற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. பாரத் உரம் தமிழகத்தில் 5  மாவட்டத்திற்கு 2100 டன் உர விநியோ கத்தை தொடங்கியுள்ளது” என்றார். நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் கண்ணன், முதன்மை செயல் அதிகாரி பாலு, பொதுமேலாளர் (பணிகள்) செந்தில் நாயகம், விற்பனை அதிகாரிகள் அடைக்கலம், பாஸ்கர், நிர் வாக மேலாளர் ஜெயப்பிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு மேலாளர் அம்ரிதகௌரி, அலுவலர் குணசேகரன் உட்பட ஸ்பிக் அதி காரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

;