districts

img

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான பணிகள் 95 விழுக்காடு நிறைவு

மதுரை, செப்.22- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95 சத வீதம் நிறைவடைந்துள்ளது என்றும்  மதுரை சர்வதேச விமானநிலை யத்திற்கு ஒன்றிய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்டது. ஆனால், தமிழக  அரசு 543 ஏக்கர் நிலம் கொடுத்துள் ளது என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா  மதுரையில் வியாழனன்று செய்தி யாளர்களிடம் கூறினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடியும், தொற்று நோய்ப் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134  கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு.  வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.  மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250-ஆக அதிகரிக்கப் பட்டுள்ளன. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து  வைப்பார் என்றார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்று வது குறித்துப் பேசிய நட்டா, “ரூ.550 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கியது. ஒன் றிய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது” என்றார். காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பாஜக ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 65 சதவீதம்  அதிகரித்துள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி இரட்டிப்பாகி யுள்ளது. இப்போது நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி உள்ளது என்றார்.  

;