districts

img

தமிழகத்தில் 60 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் புதிதாக கட்டப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை, நவ.29-  தமிழகத்தில் ரூ.270 கோடி யில் 60 ஊராட்சி ஒன்றிய அலு வலகங்கள் புதிதாக கட்டுவதற்கு  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள் ளார் என்று ஊரக வளர்ச்சி துறை  அமைச்சர் பெரியகருப்பன் தெரி வித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்  பத்தூரில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டி டத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டி னார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித்  தலைவர் மதுசூதன் ரெட்டி தலை மை வகித்தார்.  மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமை திட்ட இயக்கு னர் சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலவாணி, ஒன்றிய  துணைத் தலைவர் மீனாள், ஊராட்சி உதவி இயக்குனர் குமார் ,ஆணையாளர் விஜயகுமார் ,வட்  டார வளர்ச்சி அலுவலர் தென்ன ரசு ,மேலாளர் செழியன், திருப்பு வனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன் ,காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து, மானாமதுரை நகர மன்ற  தலைவர் மாரியப்பன் கண்ணாடி, மானாமதுரை திமு கநகர் செயலா ளர் பொன்னுச்சாமி ,மானா மதுரை ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் லதா அண்ணாதுரை, மானாமதுரை நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், மானாமதுரை நகர்மன்ற உறுப்பி னர் சதீஸ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் அமைச்சர் கூறிய தாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட நிதிநெருக்கடி சீர்கேடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சரி செய்து கொண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் 60 ஊராட்சி ஒன்றி யங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.270 கோடி செலவில் அமைப்ப தற்கான  திட்டம் தொடங்கப்பட்டுள் ளது .இதற்கான உத்தரவை தமி ழக முதல்வர் உத்தரவு பிறப்பித் துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியத்தில் 4ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக அலுவலகம் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. சாக்கோட்டை ,சிவகங்கை, எஸ் புதூர் ,திருப்பத்தூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய  கட்டிடம் கட்ட  தமிழக முதல்வர் உத்த ரவிட்டுள்ளார் .தமிழகத்தில் ரூ.  45 லட்சம் செலவில் கிராம ஊராட்சி செயலகம் செயல்படுத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி செயலகம் செயல்படுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது  ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும்.  இந்தியாவிற்கு ஒரு முன்னோடி  திட்டம் ஆகும். தமிழகத்தில்  388 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஊராட்சி ஒன்றிய தலைவர் களுக்கும் புதிய வாகனம் வழங்கப்  பட உள்ளதாகவும் அவர் தெரி வித்தார். துறை அலுவலர்களுக் கும் இத்திட்டம் புதிய வாகனம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசி னார்.

;