districts

img

52 ஆவது வார்டில் துணை மேயர் ஆய்வு

மதுரை, ஜூன். 16-  மதுரை மாநகராட்சி  52வது வார்டுக்கு உட்பட்ட  பச்சரிசிக்கார தெரு, மேட்டு கம்மாளர் தெரு ஆகிய பகு திகளில் குண்டு  குழியுமாக இருக்கக்கூடிய சாலைகளை சீரமைக்கக்கோரி துணை மேயர் டி. நாகராஜனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து வெள்ளியன்று துணை மேயர் டி. நாகராஜன் மற்றும் உதவி ஆணையாளர் ஆகி யோர் நேரில்  ஆய்வு மேற் கொண்டு, சாலைகளை சீர மைத்து புதிய சாலைகள் அமைக்க உத்தரவிடப் பட்டது. ஆய்வின் போது சிஐடியு மாவட்ட செயலா ளர் இரா. லெனின், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்திய - 2 ஆம் பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா, மாவட் டக்குழு உறுப்பினர் பி. கோபிநாத், பகுதிக்குழு உறுப்பினர் ஏ.அழகே சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.