மதுரை, செப். 17 - மதுரையைச் சேர்ந்த மாணவி சுஷ்மிதாவிற்கு பிணையில்லாக் கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று தெற்குமாசி வீதியில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற மதுரை மக்க ளவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்து கொண்டு, மாணவிக்கான கல்விக் கடன் ரூபாய் 40 லட்சத்திற் கான சான்றிதழை வழங்கினார்.
நிகழ்ச்சியில் யூனியன் வங்கி உயர் அதிகாரி உதய பாஸ்கர் சகாவ், மண்டல அலுவலக முதல் நிலை மேலா ளர் சார்லஸ், உதவி மேலாளர் நேத்ரன், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர் ராமமூர்த்தி, அ. கோவிந்தராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய 2-ஆம் பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா, மாணவி சுஷ்மிதா, மாணவியின் தந்தை ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவிலேயே கல்விக் கடன் வழங்குவதில், மதுரை மாவட்டம் முன்னணியில் உள்ளது. இதற்கு மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் முக்கியக் கார ணம் ஆவார். தகுதியிருந்தும் உயர்கல்வி கனவை நனவாக்க முடி யாத ஏழை - எளிய குடும்பத்திலிருந்து வரும் மாணவ - மாணவியர்க்கு, பொதுத் த்துறை வங்கிகள் மூலம் அதிகபட்ச கடன் கிடைப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றார்.
சராசரியாக ஒரு மாணவர் அல்லது மாணவியர்க்கு ரூ. 4 லட்சம் அளவிற்கே கல்விக்கடன் வழங்கப்படும் நிலை யில், மதுரையில் ஒருவருக்கே ரூ. 40 லட்சம் வரை கல்விக்கடன்- அதுவும் பிணையில்லாமல் கிடைக்கும் நிலை யை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் தான், மாணவி சுஷ்மிதாவிற்கும் தற்போது ரூ. 40 லட்சம் பிணையில்லாக் கல்விக் கடனை ‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’ மூலம் பெற்றுத் தந்துள்ளார்.
இதுதொடர்பாக சு. வெங்கடேசன் எம்.பி. கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டிலே இந்தியாவிற்கான ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சியை மதுரை மாவட்டம் கல்விக் கடன் வழங்குவதில் நிகழ்த்தி வருகிறது. 4 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாத (Collateral) கல்விக் கடனை வழங்கி வருகின்றோம். ஆனால் 40 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாமல் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை யூனியன் பாங்க் ஆப் இந்தியா செயல்படுத்தி வருகிறது.
உலகில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாண வர்கள், அதற்கான கல்வித் தகுதி யை வளர்த்துக்கொள்ள வேண்டும்; உங்களுக்கு எந்தவித பொருளாதார மும் இல்லை என்றாலும் கல்வியின் மூலம் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் மாணவர் களுக்கு உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. கூறினார்.