districts

img

கொசவப்பட்டியில் ஜல்லிக்கட்டு காவலர் உட்பட 40 போ் காயம்

நத்தம், மார்ச்.11- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி கொசவப்பட்டி புனித அந்தோணியாா் திருவிழாவை யொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.  இதில் பல்வேறு மாவட்டங் களிலிருந்து 600 காளைகள் பங்கேற்றன. கால்நடைத்துறை மருத்துவக் குழுவினரின் பரிசோ தனைக்கு பின், 600 காளைகள் அனுமதிக்கப்பட்டன. அதே போல் 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்க வந்த நிலையில், 350 பேருக்கு அனுமதி அளிக்கப் பட்டது. இதில் வெற்றி பெற்ற காளை கள், மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மாடு முட்டியதில் 15 வீரா்கள், 11 காளைகளின் உரிமையாளா் கள், 13 பாா்வையாளா்கள், காவலர் உட்பட மொத்தம் 40 போ் காயமடைந்தனா். இதில் படு காயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.