மதுரை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றிபெற்றனர். 23 ஆவது வார்டில் டி. குமரவேல், 80 ஆவது வார்டில் டி. நாகராஜன் , 96 ஆவது வார்டில் நா. விஜயா, 56 ஆவது வார்டில் வி.ஜென்னியம்மாள் ஆகியோர் வென்றனர். அவர்களுக்கு கட்சியின் தலைவர்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து,வெற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர். தியாகி பாலு சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.