இஸ்லாமாபாத், ஆக.5- ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிர தமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக் கப்பட்ட நிலையில், அவர் எம்பி பதவியை இழந்தார். பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ-இன்சாப் (பிடிஐ) தலை வரும், முன்னாள் பிரதமரு மான இம்ரான்கான், கடந்த ஆகஸ்ட் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தான் பிர தமராக இருந்த காலகட்டத்தில் வெளிநாட்டு பயணங்க ளில் அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களில் பல வற்றை அரசின் தோஷகானா என்ற களஞ்சியத்தில் ஒப்ப டைக்காமல் தாமே வைத்துக்கொண்டதாகவும், சில வற்றை விற்பனை செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இம்ரான்கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் மாவட்ட செசன்ஸ் நீதி மன்றம் சனியன்று தீர்ப்பளித்து, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராத மும் விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்த சிறிது நேரத்திலேயே லாகூரில் உள்ள ஜமான் பார்க் இல்லத்தில் பஞ்சாப் காவல்துறையினரால் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். 3 ஆண்டுகள் சிறைத்தண் டனை வழங்கப்பட்டுள்ளதால் இம்ரான்கான் எம்.பி. பதவியை இழந்துவிட்ட நிலையில், 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலையும் இம்ரான் கான் எதிர் கொள்ளவுள்ளார்.