districts

img

விருதுநகர் மாவட்டத்தில் 16 லட்சம் வாக்காளர்கள்

விருதுநகர், நவ.9- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி புதனன்று வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு: இராஜ பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 399 ஆண் வாக்கா ளர்கள், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 383, இதரர் 33 என மொத்தம்  2லட்சத்து 25 ஆயிரத்து 815 வாக்காளர் களும், திருவில்லிபுத்தூரில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 828 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 161 பெண் வாக்கா ளர்கள், இதரர் 36 என மொத்தம் 2லட்சத்து  38 ஆயிரத்து25 வாக்காளர்களும், சாத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 416  ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 21 ஆயி ரத்து 999 பெண் வாக்காளர்கள், இதரர் 61 என மொத்தம 2 37 ஆயிரத்து 476 வாக்காளர் களும், சிவகாசி தொகுதியில் 1 லட்சத்து  16 ஆயிரத்து 815 ஆண் வாக்காளர்கள்,

1 லட்சதது 22 ஆயிரத்து 304 பெண் வாக்கா ளர்கள், இதரர் 26 என மொத்தம் 2 லட்சத்து  37 ஆயிரத்து 476 வாக்காளர்களும், விருது நகர் தொகுதியில் 1 லட்சத்து 07 ஆயிரத்து  215 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 12 ஆயி ரத்து 533 பெண்கள், இதரர் 48 என மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 796 வாக்காளர் களும் அருப்புக்கோட்டை தொகுதியில் 104969 ஆண், 111218 பெண் வாக்காளர், இத ரர் 17 என மொத்தம் 216204 வாக்காளர் களும், திருச்சுழி தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 218 ஆண்கள், பெண்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 55, இதரர் 19 என  மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 283 வாக்காளர்களும் உள்ளனர். மொத்தமுள்ள ஏழு சட்டமன்ற தொகு திகளில் சேர்த்து ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 74 ஆயிரத்து 860, பெண் வாக்கா ளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 653, இதரர்  231 என மொத்தம 15 லட்சத்து 88 ஆயிரத்து  744 வாக்காளர்கள் விருதுநகர் மாவட்டத் தில் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை வெளி யிட்டு மாவட்ட ஆட்சியர் கூறுகையில், நவம்பர் 12,13,26 மற்றும் 27 ஆகிய தேதி களில் வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கு தல், பெயர் திருத்தம் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம்கள் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெறும். எனவே, பொது  மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.