திருவனந்தபுரம், ஏப்.30- திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் புதனன்று (ஏப்.27) திறக்கப்பட்ட டாடா எலெக்சிஸ் உட்பட ஒரு வருடத்திற்குள் கின்ஃப்ரா தொழில் பூங்காவில் எட்டு பெரிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ரூ.1000 கோடி முதலீடும் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் கிடைத்தது. தொழில் துறையின் கீழ் உள்ள கின்ஃப்ராவில், காக்கநாடு, கழக்கூட்டம் பூங்காக்கள் மற்றும் எர்ணாகுளம் பெட்ரோ கெமிக்கல் பூங்கா ஆகிய வற்றில் இந்த நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. காக்கநாடு எலக்ட்ரானிக் பூங்காவில் டிசிஎஸ், வி கார்டு, அகப்பே டையோக்னோஸ்டிக், டிரான்ஸ் ஏசியன் ஷிப்பிங் கம்பெனி, ஹைகான் ஆகிய நிறுவனங்கள் வந்துள்ளன. கழக்கூட்டத்தில் உள்ள பிலிம் மற்றும் வீடியோ பூங்காவில் டாடா எலெக்சிஸ் மட்டுமின்றி, வின்விஷ் டெக்னாலஜி நிறுவனத்துக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜாலி கோட்ஸ் நிறுவனம் எர்ணாகுளம் பெட்ரோ கெமிக்கல் பூங்காவிற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு கின்ப்ஃரா மூலம் மொத்தம் ரூ.1,522 கோடி மதிப்பிலான தனியார் முதலீடு கேர ளத்துக்கு வந்தது. இது சுமார் 30 ஆயிரம் வேலை களை உருவாக்கியது. பல்வேறு நிறுவனங்க ளுக்கு 128.82 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.