இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டம் அவனியாபுரம் பகுதிக்குழு சார்பில் போதைக்கு எதிராக 1கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.தமிழரசன், மாவட்ட தலைவர் வி.கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருதரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலமுருகன், பகுதிக்குழு துணைச்செயலாளர் கே.நாகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லுப்பட்டி ஒன்றியம் காடநேரி கிளை சார்பிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.