districts

மூடப்பட்ட சுரங்கத்தை திறக்க எதிர்ப்பு: குன்னம் மக்கள் சாலை மறியல்

பெரம்பலூர், பிப்.28 - பெரம்பலூர் மாவட்டம்  குன்னம் தாலுகா வயலப்பாடி - கோவிந்தராஜ பட்டினம் செல்லும் சாலை யில் உள்ள தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. தற் போது, மீண்டும் கடந்த 2 நாட்க ளாக சுண்ணாம்புக்கல் சுரங்கத் தில் உள்ள தண்ணீரை வெளி யேற்றி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த கோவிந்தராஜபட்டினம் கிரா மத்தைச் சேர்ந்த இளைஞர் கள் சுண்ணாம்புக்கல் சுரங்கத் திற்கு சென்று தண்ணீரை வெளியேற்றுவதை ஞாயி றன்று தடுத்து நிறுத்தினர். சுரங்கத்தில் இருந்து தொ டர்ந்து தண்ணீரை வெளி யேற்றுவதால் சுற்று வட்டா ரத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறை வதோடு, வயலப்பாடி வீரம நல்லூர், காரைப்பாடி, ஓலைப்பாடி, கோவிந்தராஜ பட்டினம் உள்ளிட்ட கிராமங் களுக்கும் குடிதண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீரை வெளியேற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில் மீண்டும் திங்களன்று காலை 7 மணி  முதல் வயலப்பாடி  - வேப்பூர்  சாலையில் கோவிந்தராஜ பட்டினத்தை சேர்ந்த பொது மக்கள் ஒன்று திரண்டு, சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை மூடக் கோரியும், சுமார் 100  அடி ஆழத்தில் இருந்து  தண்ணீரை வெளியேற்று வதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், அவ்வழியாக வந்த  அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று  அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததின் பேரில் கலைந்து  சென்றனர்.

;