districts

பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்வு

பெரம்பலூர், ஏப்.23 - பெரம்பலூர் மாவட்டம் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள பள்ளி மேலாண்மை குழு விற்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ.வெங்கடபிரியா முன்னிலையில் நடைபெற்றது.  பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பின்னர் தெரிவித்த ஆட்சியர், பெரம்ப லூர் மாவட்டத்தில் 56 அரசு நடுநிலைப் பள்ளி களுக்கும் மேலாண்மைக் குழு உறுப்பினர்களாக 1,120 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி  மேலாண்மைக் குழு தலைவராகவும், துணைத் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கும் கட்டாயம் இருக்க வேண்டும்  என்பதன் அடிப்படையிலும், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் அடிப்படையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது என்றும், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பி னர்களுக்கு முறையான பயிற்சி அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் அமைக்கப் படவுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் 20 நபர்கள் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களில் 15 பேர் பெற்றோர்கள், அதிலும் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 5 நபர்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், சுய உதவிக் குழுவினர் இருப்பர் என்றார்.  இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவ லர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் கே. சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் த.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நக ராட்சிக்கு உட்பட்ட மேலக்குடியிருப்பு வார்டில் மறு  கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு கூட்டம் நடை பெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக உடை யார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதி மணி, பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மை குழு தலைவராக வளர்மதியும், துணைத் தலைவ ராக கணேசமூர்த்தியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பள்ளிக்கு தேவையான கட்டிட  வசதிகள் மற்றும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் படி பெற்றோர் உறுப்பினர் சார்பாக வார்டு கவுன்சி லரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

;