districts

img

தழுதாழை மக்களின் மனுவை வாங்க மறுத்த பெரம்பலூர் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்திடுக!

பெரம்பலூர், அக்.20-  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை 5-ஆவது வார்டு அம்பேத்கர் தெரு மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாத தழுதாழை ஊராட்சி மன்ற தலைவர் சுமதிராஜேஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழனன்று (அக்.20) அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.  காலை 11 மணி முதல் காத்தி ருந்த அவர்கள் மனுவை வாங்க ஆட்சியர் அலட்சியம் காட்டியதாக கூறி, விதொச தழுதாழை கிளைச் செயலாளரும் 5-ஆவது வார்டு உறுப்பினருமாகிய செல்வகுமாரி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், விதொச மாவட்டச் செயலாளர் அ.கலையரசி ஆகி யோரிடம் தகவல் அளித்துள்ளனர்.  இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற சிபிஎம் தலைவர்களிடம், மனுவை வாங்க மறுத்து, திங்க ளன்று வருமாறு கூறி ஆட்சியர் சென்றுள்ளார்.  எனவே, மனுவை வாங்க மறுத்த ஆட்சியர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் தலைமையில் மக்கள் ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சி யரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.  அம்மனுவில் தழுதாழை கிராமம் 5-ஆவது வார்டில் குடிநீர் தொட்டி 2 வருடமாக சுத்தம் செய்ய வில்லை, 6 மாத காலமாக தெரு வில் மின்விளக்கு எரியவில்லை, துப்புரவு பணிகள் சரிவர நடைபெறு வதில்லை, சாக்கடை சுத்தம் செய்ய வில்லை, குடிநீர் திறந்து விடுவ தில் குளறுபடிகள், குடிதண்ணீ ரில் புழுக்கள் நிறைய உள்ளது  உள்ளிட்ட அடிப்படை தேவைக ளை நிறைவேற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் சுமதிராஜேஸ் அவர்களிடம் தெரிவித்த போது சாதி பேரை கூறி அவமதித்து வருகிறார். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என மனுவில் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் பெயரளவிற்கு தான் அணுகுவதாகவும் தொடர்ந்து அலட்சியம் காட்டிவரும் பெரம்ப லூர் ஆட்சியர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

;