பெரம்பலூர், மார்ச் 9 - பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் பாடா லூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதிய கிளை கொடியேற்று விழா செவ்வா யன்று நடைபெற்றது. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற விழாவிற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித் தார். ஆலத்தூர் ஒன்றிய செய லாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமாகிய எம். சின்னதுரை கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ.ரெங்க நாதன், கோகுலகிருஷ்ணன் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன். குன்னம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மகேஸ்வரி மற்றும் கிளை செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.