புதுச்சேரி, ஜூன் 21- கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் புதுச்சேரியில் தர்ணாவில் ஈடுபட்டனர். 2007 முதல் வழங்க வேண்டிய ஊதிய மாற்றை அமலாக்க வேண்டும். நேரடி ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும். காலிபணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். வாரிசுகளுக்கு வழங்க வேண்டிய பணிக்கான தடை ஆணையை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஊழியர்-அதி காரிகள் ஓய்வூதியர் சங்கங்களின் போராட்டக்குழு தலைவர் சையத் அபுபக்கர், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். செல்வராஜ், முருகையன், கிருபாசங்கர், பெர்லின் ஐசக், கணேசன், அரிதாஸ், தனசேகரன், பால்ஹன்றி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.