districts

img

பஞ்சாலைகளை மூடும் புதுவை அரசுக்கு கடும் எதிர்ப்பு

புதுச்சேரி, மே.17- புதுச்சேரியிலுள்ள சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை மாநில அரசு கைவிட வலியுறுத்தி சிஐடியு,ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று (மே.17) தர்ணா நடைபெற்றது. புதுவையின் பாரம்பரி யமிக்க சுதேசி, பாரதி மில்களை வருகிற 30 ஆம்  தேதியுடன் மூட ஆலைகளின் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  பஞ்சாலைகளை நவீனப்படுத்தி தொடர்ந்து இயக்கி இளைஞர்க ளுக்கு வேலை வழங்க வேண்டும், சித்ரா ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் ரூ. 100 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே  நடைபெற்ற போராட்டத் திற்கு ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷே கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் ஆர்.  ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் வி.பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் சலீம் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்திப் பேசினர். சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன் துணைத் தலைவர் குண சேகரன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் சேதுசெல்வம், ஐஎன்டியூசி தலைவர் ஞானசேகரன் எம்எல்எப் நிர்வாகி கபிரியேல்,  ஏஐசிசிடியூ தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்ற னர். முன்னதாக ஆலை களை மூடும் முடிவை கைவிடக் கோரி முழக்கம் எழுப்பினர். இறுதியாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தொழிற்சங்க தலை வர்கள் ஆலைகலை மூடும்  முடிவை கைவிட வலியுறுத்தி னார்.

;